/* */

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அரியலூர் கலெக்டர்

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு, குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அரியலூர் கலெக்டர்
X

கலெக்டர் ரமண சரஸ்வதி

இது குறித்து, அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு பெற, 1386 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, 05.07.2021 முதல் 03.08.2021 வரை, பள்ளிக்கல்வித் துறையின் rte.tnschools.gov.in என்ற இணைய வழியாக, குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

25 சதவீத இடஒதுக்கீட்டு சேர்க்கைக்கான இடங்கள் குறித்த எண்ணிக்கை, பள்ளி விளம்பரப்பலகையில் 20.07.2021 அன்றும், இணையவழி 25 சதவீத இடஒதுக்கீட்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பள்ளி விளம்பரப் பலகையில் 03.07.2021 அன்றும், தகுதியான விண்ணப்பங்கள் குழந்தைகளின் பெயர் பட்டியல் மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் அதற்குரிய காரணத்துடன் 09.08.2021 பிற்பகல் 05.00 மணி வரையிலும் பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும்.

மேலும், இணையவழி சேர்க்கை கோரி விண்ணப்பங்கள் 05.07.2021 முதல் 03.08.2021 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மேல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குலுக்கல் அடிப்படையில் 10.08.2021 அன்று தேர்வு செய்யப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jun 2021 4:50 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்