/* */

எப்போதும் வாடாத 'பாசமலர்'களாக நீடிக்கும் சகோதர உறவுகள்

brother quotes in tamil- அண்ணன் - தங்கை, அக்கா - தங்கை, அண்ணன் - தம்பி, அக்கா - தம்பி இந்த சகோதர பாச உறவுகளில் நீடித்திருக்கும் அன்பும், புரிதலும் உணர்வுபூர்வமானது. வாழும் காலம் வரை செழித்து வாழ்கிறது என்றால் மிகையல்ல.

HIGHLIGHTS

எப்போதும் வாடாத பாசமலர்களாக நீடிக்கும் சகோதர உறவுகள்
X

brother quotes in tamil-அண்ணன் - தங்கை சகோதர பாசத்தை, உணர்வுகளால் மட்டுமே பரிபூரணமாக அறிய முடியும்.

brother quotes in tamil- மனிதன் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதும், அடிப்படையாக அமைவதும் உறவுகள்தான். அதுதான், மனித வாழ்க்கையை கட்டமைக்கிறது. அடுத்தடுத்து வாழும் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. மனைவி என்ற உறவு ஆணுக்கும், கணவன் என்ற உறவு பெண்ணுக்கும் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. அந்த வகையில், உடன் பிறந்த உறவுகளாக அண்ணன்- தங்கை, அக்காள் - தம்பி, அண்ணன் - தம்பி, அக்காள் - தங்கை என, அமைகிற பாச உறவுகளின் பந்தம் இறுதி வரை தொடர்கிறது. இது, என்றென்றும் மாறாதது.


'எவ்வளவுதான் அடித்து கொண்டாலும் நமக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் துடித்து போவது சகோதர உறவு மட்டுமே'

தங்கைகளில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது. தீராத மவுனம் சுமந்து திருமணமாகிச் செல்கையில் அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ, அழாமல் நடிக்க அண்ணன்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

அண்ணன் தங்கை உறவென்பது வெறும் கையில் கட்டும் கயிற்றில் வாழ்வதில்லை, அது இதயத்தால் கட்டப்படுவது.

வலிக்காமல் குட்டுவது எப்படி என்பது தந்தைகளுக்கு மட்டுமே தெரியும்... அதுப்போல் வலிக்காமல் வலித்தது போல் நடிக்க அண்ணன்களால் மட்டுமே முடியும்.


படத்தில் சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட, வாழ்க்கையில் நல்ல உடன்பிறப்பாக இருப்பதே சிறந்தது.

அடம்பிடித்தோ, அழுது புரண்டோ, பொட்டோ பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன் "அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு இருக்கின்றனர்.

அண்ணன் தங்கச்சி சண்டை என்பது கடலும் அலையும் மாதிரி எவ்வளவு முயற்சி செய்தாலும் சேர்த்து வைக்கவும் முடியாது; பிரித்து வைக்கவும் முடியாது.

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசும் அன்பு.... விலை குடுத்தாலும் கிடைக்காத அண்ணன் தங்கை உறவுகளிடம் மட்டும் உண்டு.


அண்ணனின் அன்பு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் தங்கையின் அன்பு எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

அம்மாவின் அன்பையும், அப்பாவின் பாதுகாப்பையும், ஒரே இடத்தில் பெற முடியுமானால் அது அண்ணனிடத்தில் மட்டுமே..

'கூட பிறந்த அக்கா இல்லையே' என்று ஏங்காத பசங்களும் இல்லை ... 'கூட பிறந்த அண்ணன் இல்லையே' என்று ஏங்காத பொண்ணுங்களும் இல்லை..."

அடித்துக் கொள்வது மட்டும் எங்கள் அண்ணன் தங்கை உறவல்ல, எங்களை போல் அன்பு செய்யவும் யாரும் இல்லை அதான் எங்கள் அண்ணன் தங்கை உறவு.

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள காதலனாலும், நண்பனாலும், அப்பாவாலும், அம்மாவாலும் மட்டுமே முடியும். ஒரு பெண்ணின் பாசத்தை புரிந்துகொள்ள அண்ணனால் மட்டுமே முடியும்...


சந்தோசமாக வாழ காசு பணம் தேவையில்லை பாசம் காட்ட ஒரு தம்பி.. இருந்தால் போதும்!

ஒரு பெண் எவ்வளவு பெரியவளானாலும், தனது அண்ணனுக்கு, 'அவள் என்றுமே * குழந்தை தான்.

அண்ணன் எவ்வளவுதான் சோம்பேறியாக இருந்தாலும், யாரிடமும் விட்டுக்கொடுக்காத தங்கை தான் அண்ணன் தங்கை உறவிற்கு சிறந்த உதாரணம்.

ஒரு பெண் தனது குறைகளை தன் பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால், தன் ஆசைகளையும், கனவுகளையும் அண்ணனிடம் மட்டும்தான் சொல்கிறாள்.

அண்ணன் அழுதால் அவளும் அழுது, அண்ணன் சிரித்தால் அவளும் சிரித்து, வண்ணம் கூட்டும் சின்னப் பறவை இல்லமெனும் கூட்டில் இன்பமிறைக்கும் இனிய வானம்பாடி அண்ணனின் பெருமையை அனைவருக்கும் பரப்பும் ஆகாசவானிதான் தங்கை.


இப்படி, அண்ணன் - தங்கை பாசம், என்றென்றும் பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனச்சோலைதான். இந்த பாசத்தை வார்த்தைகளால் அளந்துவிட முடியாது. 'நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...' என, 'பாசமலர்' படத்தில் சிவாஜி பாடிய பாடல் வரிகளை போல, அண்ணன் - தங்கை பாசம் வலிமையானது. உணர்வுபூர்வமானது. என்றென்றும் அது நிலைத்திருக்கும்.

Updated On: 7 Jan 2023 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...