/* */

வேக வைத்த முட்டை கருகினாலும் மகா மீதான காதல் குறையவில்லை - ரவீந்திரன் 'குஷி'

VJ Mahalakshmi News - மகாலட்சுமி வேகவைத்த முட்டை கருகி போனதை புகைப்படமாக வெளியிட்டு, 'புது வாழ்க்கை, புது மனைவி, சூப்பர் சமையல்' என, உற்சாகமாக கூறி இருக்கிறார் ரவீந்தர்.

HIGHLIGHTS

வேக வைத்த முட்டை கருகினாலும் மகா மீதான காதல் குறையவில்லை - ரவீந்திரன் குஷி
X

 vj mahalakshmi news - மனைவி மகாலட்சுமி செய்த சமையலை புகழ்ந்த ரவீந்தர்.

VJ Mahalakshmi News - லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

குறிப்பாக பிஹைண்ட்வுட்ஸ்சில் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், 'பாட்மான்' என்று இணையவழி நிகழ்ச்சிகளில் பலரால் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார்.


ஸ்டார் தம்பதியான நயன்- விக்கி ஜோடியை போல, இந்த ஜோடியும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. திருமணத்துக்கு பிறகான இவர்களது தினசரி நிகழ்வுகளை, புகைப்படங்களை வெளியிட்டு, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வைரலாக்கி விட்டனர். ஜோடி பொருத்தமே இல்லாத ஒரு ஜோடியாக பலரும் இவர்களை விமர்சித்த நிலையில், உடல் தோற்ற பொருத்தத்தை காட்டிலும், மனதளவில் உணர்வுகள் பொருந்தி விட்டால், நிச்சயம் அந்த காதலும், மண வாழ்க்கையும் வெற்றி பெறும் என்ற அடிப்படையில், அவர்களது மண வாழ்க்கை இனிப்பாகவே நகர்ந்து வருகிறது.

திருமணத்துக்கு பிறகு பிஹைண்ட்வுட்ஸ் பேட்டி ஒன்றில் பேசும்போது மகாலட்சுமி, "எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே எனக்கு பிடிக்கும். அவ்வளவு தான். உடம்பை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றி என்னிடம் சொல்வார். நான் அப்படி எதையும் செய்து விட வேண்டாம் என்று தான் கூறுவேன். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்" என்றார்.


பின்னர் அவ்வப்போது தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், சோஷியல் மீடியாவில் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் ரவீந்தர் பகிர்ந்தார். மேலும், "ஒரு மாத அனிவர்சரி. எங்களை பார்த்து சிரிக்க மக்களுக்கு 100 காரணங்கள் இருக்கும். ஆனால், எனது சந்தோசத்திற்கு ஒரே ஒரு காரணம் தான். அது நீ. லவ் யூ "முயலு" என ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார்.


இதில், கமெண்ட் செய்த மகாலட்சுமி, "ஹாப்பி அனிவர்சரி அம்மு. எனது மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான். லவ் யூ டூ மேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்தான் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி சமையல் குறித்த க்யூட்டான புகைப்பட பதிவை பகிர்ந்துள்ளார். அதில் வேகவைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், "என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை. மகாலட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Nov 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடியின் 100 நாள் திட்டங்கள்..! வளர்ச்சியின் அடுத்த கட்டம்...
  2. சென்னை
    இரவில் மெரினாவிற்கு வராதீர்கள்! காவல்துறை எச்சரிக்கைக்கு ஓகே சொன்ன...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் இலவச ஆதார் பதிவு முகாம்
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. வேலைவாய்ப்பு
    இந்தியாவில் அதிக ஊதியம் தரும் 5 வேலைகள்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
  7. ஈரோடு
    ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு