திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை மேளதாளத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, திங்கள்கிழமை 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 181 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வந்தன. அரசு அறிவித்தபடி திங்கள்கிழமை அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட்டது.

முதல் நாளான நேற்று மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

ரோஜாப்பூ, சாக்லெட், பூங்கொத்து கொடுத்து மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு:

திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியைகள் கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு ஆசிரிய, ஆசிரியைகள் ரோஜாப்பூ, சாக்லெட், பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். இந்தக் கல்வியாண்டில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுப்போம் என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனா்.

பாடப் புத்தகம் விநியோகம் தொடக்கம்:

மாவட்டம் முழுவதும் தொடக்கக் கல்வி பயிலும் 1,29,058 மாணவ, மாணவிகள், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,54,784 மாணவ, மாணவிகள் என மொத்தம் 2,83,842 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இலவச பாடப் புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள் வழங்கும் பணி பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தொடங்கப்பட்டது.

விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) பாடப் புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவப்புக் கம்பளம் விரித்து மேள தாளத்துடன் வரவேற்பு

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 2024 - 25ஆம் கல்வியாண்டில், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனா்.

மாணவிகளை வரவேற்கும் விதமாக பள்ளி வாசலில் இருந்து சிவப்புக் கம்பளம் விரித்து, மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்று மகிழ்ந்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story