/* */

விருதுநகர்: இன்று நடக்கவிருந்த கால்நடை உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர்: இன்று நடக்கவிருந்த கால்நடை உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு
X

கோப்பு படம் 

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் அழைப்பு கடிதங்கள், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும், இன்று 28-ம் தேதி முதல், மே 9-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில், நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியர் மேகநாதர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு தயாராக இருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  9. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  10. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...