/* */

ராம்கோ சிமெண்ட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்- தமிழக அமைச்சர்கள்.

வருவாய் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள்.

HIGHLIGHTS

ராம்கோ சிமெண்ட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்- தமிழக அமைச்சர்கள்.
X

விருதுநகர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தமிழக வருவாய் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

விருதுநகர் அருகிலுள்ள ஆர் ஆர் நகர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்



தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர்

இதனால் அதிகமான அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் எதிர்வரும் காலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்படும் என்பதால் இதனை நிவர்த்தி செய்ய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர் ஆர்.நகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு ஆகஸிஜன் தயாரிக்கும் ஆலை சுமார் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ளது

இதனை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர் இந்த ஆலை மூலம் நாளொன்றுக்கு 42 முதல் 48 சிலிண்டர்கள் வரை ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது பூஸ்டர் யூனிட் இல்லாத பட்சத்தில் உடனடித் தேவைக்காக 3 ஏர் ரிசிவர் பேங்கிங் மூலம் ஆக்சிஜன் 20 முதல் 22 சிலிண்டர்கள் சமமான கொள்ளளவு வழங்குவதற்கு தயார் நிலையில் செயல்பட உள்ளது . மேலும் சிலிண்டர்கள் நிரப்புவதற்கு பூஸ்டர் யூனிட் கிடைத்தவுடன் நாளொன்றுக்கு 42 முதல் 48 சிலிண்டர்கள் வரை ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர கண்ணன் மற்றும் மாவட்ட வருவாய் மற்றும் நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்....

Updated On: 14 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க