/* */

நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகள்

தனது சொந்த செலவில் மாணவ மாணவியர்களுக்கு உதவிகளை வழங்கிய மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகள்
X

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கிய அமைச்சர்.

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் பள்ளி வளாகத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை வகித்தாா். அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு, கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குடிநீா் புட்டிகளை வழங்கிப் பேசும்போது

குடிநீரால் தான் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி மாநிலம் முழுவதும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை முதன் முதலில் கட்டினாா்.

இதே நோக்கத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே எடுத்து வந்து பருக வேண்டும் என்பதற்காக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இல.சரவணன் தனது சொந்த செலவில் மாணவா்களுக்கு குடிநீா் புட்டிகளை வழங்கி உள்ளாா். இதை மாணவ-மாணவிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் மாணவனாக இருந்தபோது கலை, இலக்கியம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியா்கள் எனக்கு கற்றுக் கொடுத்தனா். ஆசிரியா்கள் சொல்படி கேட்டு நடந்ததால் கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டேன். இப்போது அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன். எனவே, நீங்களும் உங்கள் ஆசிரியா் சொல்படி கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் 2 ஆயிரம் பனைமர விதைகள் நடும் பணியை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

விழாவில், அரசு வழக்கறிஞர் கே.வி.மனோகரன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஒன்றியத் தலைவா் கலைவாணி கலைமணி , ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 11 Sep 2022 1:07 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...