/* */

வேங்கிக்கால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்

வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்

HIGHLIGHTS

வேங்கிக்கால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்
X

உபரி நீர் வெளியேறியதால் சாலையில் தேங்கியுள்ள நீர்

திருவண்ணாமலையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி இருந்த நிலையில் மீண்டும் இன்று காலை பெய்த கனமழை காரணமாக உபரி நீர் அதிகளவு வெளியேறியது.

இதனால் திருவண்ணாமலை வேலூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் துரிஞ்சாபுரம் ஒன்றியம் சேரியன்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றதால் அந்த ஏரியில் இருந்து உபரி நீர் அதிகளவு வெளியேறியது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரி வெள்ளத்தை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

Updated On: 23 Oct 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்