/* */

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
X

மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 66 தீயணைப்பு வீரர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் மற்றும் இந்தியா முழுவதும் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் அந்த வாரம் தீத்தடுப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த மற்றும் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் திருவண்ணாமலை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகன், நிலைய அலுவலர் கமால்பாஷா மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஜவ்வாதுமலை தீயணைப்பு நிலையத்திலும் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் மலர் வளையம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தீத்தடுப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்