தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்

தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
X
தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் அன்னையர் தின செஸ் போட்டிகள் நடைபெற்றது.

தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் கோடைகால சதுரங்க பயிற்சி முகாம் மே மாதம் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். அதனை தொடர்ந்து அன்னையர் தினத்தை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் 55-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடந்தது. அகாடமி வளாகத்தில் நடந்த இந்த போட்டிகளில், அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஆசிரியர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார், போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அகாடமி செயலாளர் மாடசாமி, பொருளாளர் கணேஷ் குமார் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். வெற்றி பெற்றவர்கள் விபரம் 10-வயது பிரிவில் ஸ்ரீ ஆக்நேயா, விஜய்எடிசன்,ஹர்ஸினி,பரிக்ஷித் , தேகந், மோனிஷா, தியாஸ்ரீ, கிர்திக், சிந்துஜஸ்வின், ஜெய்யாதவ், ஆகியோரும்,

14- வயது பிரிவில் தாரணிக்காஸ்ரீ, முத்தமிழ் ஜெகன், சன்ஜெய்குமார், சுஜெய், நாக பிரணேஷ், மகிஷாஶ்ரீ, யுவெசன், தமன்யா, கார்த்திக், சாத்வீகா ஆகியோரும் வெற்றி பெற்றனர். இளம் சதுரங்கவீரர்களுக்கான பரிசினை திருனேஷ், மகிழினிஶ்ரீ பெற்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது