/* */

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு..!

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் -மாவட்ட ஆட்சியர்

HIGHLIGHTS

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு..!
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

கல்வி தொலைக்காட்சியில் அரசுப்பணி போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது, போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சரால் கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான கலந்துரையாடல்கள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் ஆய்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையும், இதன் மறுஒளிபரப்பு இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இதே நிகழ்ச்சியினை TN career services employment என்ற youtube-ல் அடுத்தடுத்த நாட்களில் காணலாம். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இவ்வனைத்து தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம், என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Updated On: 19 May 2022 8:02 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...