/* */

திருவண்ணாமலை; சாராயம், கஞ்சா விற்ற 5 பேர் குண்டா் சட்டத்தில் கைது

Liquor News- சாராயம், கஞ்சா விற்ற வழக்குகளில் பெண்கள் உட்பட ஐந்து பேர் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

HIGHLIGHTS

Liquor News | Women Arrested
X

சோதனையில் பிடிபட்ட கள்ளசாராயத்தை கொட்டி அழித்த போலீசார்.

Liquor News- திருவண்ணாமலை தாலூகா, பூமந்தகுளம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மனைவி ஜான்சி (வயது 48) சாராய விற்பனையில் ஈடுபட்ட இவரையும். திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி மங்கை (42) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவரையும், திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். போளூர் நகரம் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது, போளூர் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலூகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார், திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது, திருவண்ணாமலை தாலூகா போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 5 பேரும் தொடர்ந்து, குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி கார்த்திகேயன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களை, போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சாராய வேட்டையில் போலீசார்

மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவுப்படி, செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 170 லிட்டர் எரி சாராயத்தை வருவாய் கோட்ட அலுவலர் முன்னிலையில் கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் நடத்திய சோதனையில் 140 லிட்டர் கள்ள சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த ஐந்து நபர்கள் பிடிபட்டனர். அவர்களை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டரை காட்டுப்பகுதியில், 1200 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சாராயம் விற்பவர்கள், கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் குறித்து தொடர் சோதனை நடத்தப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jan 2023 10:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!