/* */

வந்தவாசியில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள்

வந்தவாசி தாலுகாவில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

வந்தவாசியில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - கோப்புப்படம் 

வந்தவாசி தாலுகாவில் கூடுதலாக 3 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அவை 10-ந்தேதி முதல் செயல்படும் என்றும் மாவட்ட் ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா மற்றும் நவரைப் பருவத்தில் 11 தாலுகாக்களில் 71 நெல் கொள்முதல் மையங்கள் மூலம் சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 160-ம், இதர ரகங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 115-ம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைமுறையில் செயல்பட்டு வரும் 71 நெல் கொள்முதல் மையங்களுடன் வந்தவாசி தாலுகாவில் சத்தியவாடி, தெய்யார் மற்றும் எரமலூர் ஆகிய 3 இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் மையங்கள் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு 8-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி தங்களது நெல்லை கொள்முதலுக்கு வழங்கி பயன்பெறலாம்.

மேலும் விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது 'வாட்ஸ் அப்' மூலமாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்

Updated On: 6 May 2023 1:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  3. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  4. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  5. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  9. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்