/* */

திடீர் மழையால் தத்தளித்த திருவண்ணாமலை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு..

Tiruvannamalai Rain News Today-திருவண்ணாமலையில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

HIGHLIGHTS

Tiruvannamalai Rain News Today
X

Tiruvannamalai Rain News Today

Tiruvannamalai Rain News Today-திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஓரிரு தினங்களாக மாவட்டத்தில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மதியம் சுமார் 3.30 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

திருவண்ணாமலை பெரிய கடை தெரு ,பெரிய தெரு ,வேலூர் சாலை ,பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி வெள்ளக் காடாக மாறியது.

நொச்சி மலைப் பகுதியில் ஏரியின் மின் கம்பம் சாய்ந்ததால் மின்வாரியத்துக்கு உட்பட்ட கிழக்கு கிராம பகுதிகளில் நான்கு மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

உடனடியாக மழை விட்ட பிறகு மின் ஊழியர்கள் வீழ்ந்த கம்பத்தை சரி செய்து மின்சாரத்தை வேறு வழியாக மாற்றி தரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மழையின் காரணமாக பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் நனைந்து கொண்டே வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

பலத்த காற்றின் காரணமாக திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு கிளி பட்டு ஆகிய இரண்டு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனடியாக ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை மாலை சுமார் 6 மணியளவில் நின்றது. பள்ளிகள் விட்டும், மழை நின்றதும் சாலையோரம் ஒதுங்கி சென்றவர்களும் ஒரே நேரத்தில் சென்றதால் திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த பலத்த மழையினால் சுமார் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் சரிந்து விழுந்து கிடந்தது.

மின்னல் தாக்கி மாணவி உயிரிழப்பு

வெறையூர் அருகே உள்ள அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகள் வினோஷா (வயது 16).

இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

அப்போது திடீரென விவசாய நிலத்தில் இருந்த வினோஷா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெறையூர் போலீசார் விரைந்து வந்து வினோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 11:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...