/* */

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாஸ் கிளினிங்

அண்ணாமலையார் கோயிலில் இருந்து தொடங்கி கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாஸ் கிளினிங்
X

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு (மாஸ் கிளினிக்) மலை சுற்றும் பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.   

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் திருவண்ணாமலை தூய்மை அருணை இணைந்து சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு (மாஸ் கிளினிக்) மலை சுற்றும் பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், தூய்மை அருணை துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன் , முன்னிலை வகித்தனர்.

இதில் 1,220 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கிரிவலப்பாதை நகராட்சி மற்றும் ஊராட்சியில் வருவதால் நகராட்சியில் 6 குழுக்களும், ஊராட்சிகள் சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர், இதில் தூய்மை அருணை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பல்வேறு கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த பணி 10-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

இந்த தூய்மைப் பணி அண்ணாமலையார் கோயிலில் இருந்து தொடங்கி கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நிறைவாக பேருந்து நிலையம் அருகில் நிறைவுபெற்றது. இந்த தூய்மைப் பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், இணை இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் , தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம், அரசு உயரதிகாரிகள் ,அரசு அலுவலர்கள் ,நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

துப்புரவுப் பணி முடிந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார், மாநில தடகள சங்கத்தின் துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன் , அரசு உயரதிகாரிகள் அரசு அலுவலர்கள் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் ஒன்றாக அமர்ந்து கிரிவலப்பாதையில் உணவு அருந்தினர்.

Updated On: 10 April 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...