/* */

திருவண்ணாமலை: பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க மார்ச்.15 கடைசி நாள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க மார்ச்.15 கடைசி நாள்
X

2021-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,00 வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சுழல் கல்வி மற்றும் பயிற்சி சுற்றுச்சுழல் விழிப்புணர்வு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, போன்றவற்றில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்திய நிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள், குடியிருப் போர் நலசங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற் சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தலைமையில் அமைக்கப் பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்வு செய்யும், இதற்கான விண்ணப்பம் படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் www.tnpsb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய ஆவணங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு (DVD) ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் பசுமை சாம்பியன் விருது என குறிப்பீட்டு கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப் பிக்கலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் திருவண்ணாமலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். மேலும் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 15.3.2022 என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 March 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...