/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்.

சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவரது மகன் வேலு (வயது 24). இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயதுடைய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட வேலுவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் வழங்க பரிந்துரை செய்தார். அதன் பின்னர் வேலுவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செங்குணம் கிராமத்தை சேர்ந்த பக்கிரிகுமார் என்பவரது மகன் ஆனந்தன் (வயது 47). இவர், சாராயம் விற்றதாக போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஆனந்தன் தொடர்ந்து சட்டவிேரத செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் , கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து ஆனந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் இருக்கும் அவரிடம் போலீசார் வழங்கினர்.

Updated On: 18 April 2023 2:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...