/* */

நகர்மன்ற உறுப்பினரின் முயற்சியினால் சீரமைப்புப்பணிகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை 10 வது வார்டில் நகரமன்ற உறுப்பினரின் முயற்சியால் 10 ஆண்டுகளுப் பின்னர் சீரமைக்கப்பட்டது

HIGHLIGHTS

நகர்மன்ற உறுப்பினரின் முயற்சியினால் சீரமைப்புப்பணிகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பழுதான சாலையில் ஜேசிபி மூலம் மரங்கள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்தி பாதை சீரமைக்கப்பட்டது.

திருவண்ணாமலை 10 வது வார்டு செல்ல நெரி தெரு கடந்த பத்து வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. அதுவும் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கும். அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சிக்கு முறையிட்டும் சரியான முறையில் அந்த பகுதி செப்பனிடப்படாமல் இருந்து வந்தது.கடந்த 4 நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும் சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் மரங்கள் சாய்ந்து இருந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு செல்ல மிகவும் அவதிப்பட்டனர்.தற்போது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று 10-ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன் அவர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டு பழுதான சாலையில் ஜேசிபி மூலம் மரங்கள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்தி பாதையை ஏற்படுத்தித் தந்தனர்.

இதுகுறித்து நகரமன்ற உறுப்பினர் கணேசன் கூறும்போது, இப்பகுதியை குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, வழிகாட்டுதலின் படி, நகர் மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறனிடம் கலந்து பேசி விரைவில் இப்பகுதியில் தார்சாலை அமைத்து தரப்படும். அப்போது மழைநீர் தேங்காமல் இருக்க சாலையின் இருபுறமும் வடிகால் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.

Updated On: 11 May 2022 12:43 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!