/* */

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை
X

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட கிரிவலப்பாதை. 

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில், மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கொரோனா ஊரடங்கால் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.14 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தனித் தனியாக வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 18 Jan 2022 1:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்