/* */

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

HIGHLIGHTS

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
X

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை துறை சார்ந்த துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இருப்பினும் காலை 11.20 மணிக்கு தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சிலர் அதிகாரிகள் விவசாயிகளை புறக்கணிக்க கூடாது என்று கூறியதால் கூட்டரங்கில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகள், ஏரி மற்றும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் எடைப்போட பணம் வசூலிக்கக் கூடாது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு மேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றுவதால் தான் விவசாயிகள் எந்த திட்டங்களுக்கு கிடைப்பதில்லை.எனவே 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழவச்சனூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு தரமற்ற நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள யூரியா தட்டுபாட்டை போக்க நடவடிக்கை வேண்டும். யூரியா மூட்டைகளை பதுக்குபவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் தனிநபர் கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவாக வழங்கினர்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் சோமசுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2022 12:32 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!