/* */

அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்த விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்த விழா சிறப்பாக நடைபெற்றது

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில்  வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்த விழா
X

அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற வசந்த உற்சவ முகூர்த்த நாள் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்த விழா அரோகரா கோஷங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது

பஞ்சபூதத் சிவத்தலங்களில் அக்னி தளமான திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவத்துக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி 13-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கன்னியா லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே பந்தகால் நடும் விழா அரோகரா கோஷங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது

சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த, வைகாசி மாதத்தில் விசாக விழா, ஆனி மாதத்தில் ஆணி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திக்கை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா, தை மாதத்தில் உத்ராயன புண்ணிய காலம், மாசி மாதத்தில் மாசி மக திருவிழா, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என ஆண்டு தோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவிழாக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.

அந்த வகையில் இன்று 14 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நிமிடங்கள் இரவு நேரத்தில் அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள மகிழ மரத்தை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கோயில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது. தொடர்ந்து பத்து நாளும் இரவு வேலைகளில் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெறும். உற்சவத்தின் பத்தாவது நாளான 23ஆம் தேதி அன்று ஐயங்குல தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ கோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி, மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

பந்தகால் நடும் விழா

இவ்விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

அண்ணாமலையார் கோவிலில் உள்ள சம்பந்த கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தகாலுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிச்சகர் விஜயகுமார், கோயில் அறங்காவலர்கள், சிவாச்சாரியார்கள் பந்தகாலை மூன்றாம் பிராகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட பந்தக்கால் சம்பந்த விநாயகர் ஆலயத்திற்கு அருகே வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக பந்த கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 14 April 2024 1:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு