/* */

அண்ணாமலையார் கோயிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா

அண்ணாமலையார் கோயிலில் 8- ம் தேதி மகா சிவராத்திரி விழா, பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா
X

அண்ணாமலையார் கோவில் , பைல் படம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருகிற எட்டாம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நினைத்தாலே முக்தி தரும் அற்புத ஸ்தலமான திரு அண்ணாமலை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை வீற்றிருக்கக் கூடிய அருணாச்சலேஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் அளிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம் ஆகும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வருகின்ற எட்டாம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் மாலை 5 மணிக்கு சாய ரட்சை அபிஷேகமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

மேலும் இரவு ஏழு முப்பது மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும் இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரண்டு முப்பது மணிக்கு மூன்றாம் கால பூஜையும் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடைபெறும்.

மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு கருவறையின் மேற்கு திசையில் அருள் பாலிக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அன்று மட்டும் தாழம்பூ பூஜை நடைபெறுவது சிறப்பாகும்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பரதநாட்டியம், தேவார பாடல்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் ,ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ராஜகோபுரம் எதிரில் 108 தவில் நாதஸ்வர கலைஞர்கள் தொடர் இசை நிகழ்ச்சி காலை தொடங்கி மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான சிறப்பு வசதிகளை செய்ய கோவில் நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யும் பணிகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது.

Updated On: 6 March 2024 5:20 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்