/* */

கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: இணை ஆணையர் நேரில்சென்று மீட்ப்பு

திருவண்ணாமலையில் ரூபாய் ஏழு கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி இணை ஆணையர் நேரில்சென்று தடுத்து நிறுத்தம்

HIGHLIGHTS

கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: இணை ஆணையர் நேரில்சென்று  மீட்ப்பு
X

வருண லிங்கம் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட கட்டுமான வேலைகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கட்டுப்பாட்டில் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது. இந்த அஷ்ட லிங்கத்திற்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. அதேபோல் அஷ்டலிங்க கோவில்களுக்கு தனித்தனியாக சொத்துக்களும் உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு உள்பட்ட வருணலிங்கம் சன்னதியும் அதையொட்டி 50 சென்ட் நிலமும் உள்ளது. அங்கிருந்த குடியிருப்பில் தங்கியிருந்த சாமியார் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன்பிறகு குடியிருப்பை கையகப்படுத்திய அப்போதைய கோவில் இணை ஆணையர் ஞானசேகர் குடியிருப்பையும் நுழைவுவாயில் கதவையும் பூட்டு போட்டு பூட்டினர். சாவிகள் திருக்கோயில் அதிகாரிகளிடம் இருந்தன.

இந்நிலையில், அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கோயில் இணை ஆணையர் அசோக்குமாருக்கு சிலர் அளித்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது அங்கு கட்டுமானம் மேம்பாட்டு பணிகளில் சிலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பணியாளர்களிடம் இணை ஆணையர் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பணிகளை நிறுத்தி குடியிருப்பு நுழைவாயிலை மீண்டும் பூட்டு போட்டு பூட்டினர்.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சாவிகளை தனிநபர்களுக்கு எடுத்துக் கொடுத்த அதிகாரிகள் யார்? கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகளை செய்து கொள்ள அனுமதி அளித்தது யார்? என குறித்து கேள்வி எழுந்துள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டு வரும் தமிழக அரசு, அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூபாய் ஏழு கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நிலத்தையும் மீட்டு பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்

கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய இணை ஆணையர் ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அருணாசலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார் இடம் கேட்டபோது தனி நபர்கள் மேற்கொண்ட கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி உள்ளோம். அந்த குடியிருப்பு நுழைவாயில் கதவுகள் சாவிகள் எப்படி வெளியே சென்றன என்பது குறித்து துறைரீதியான விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Updated On: 29 Sep 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...