/* */

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பெட்டியில் மனுக்கள் மாயமாவதாக குற்றச்சாட்டு

Differently Abled People -மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பெட்டியில் மனுக்கள் மாயமாவதாக  குற்றச்சாட்டு
X

பைல் படம்

Differently Abled People-திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது .

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டினர்.

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை வகித்தார் கோட்டாட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் அப்துல்ரகூப் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் பேசிய மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக மனுக்களை பெறுவதில்லை.

அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவ்வாறு போடப்படும் மனுக்கள் காணாமல் போகிறது.

மனுக்களை பெற்று அதற்கான ரசீதுகள் வழங்க வேண்டும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அடையாள அட்டை வழங்கக்கோரி மனு அளிக்கும் நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்க வேண்டும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை கிடைப்பதில்லை. உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்செட்டிப்பட்டில் இருந்து வாணாபுரம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும் .

மாதத்துக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை கேட்க கூட்டம் நடத்தப்பட வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அவர்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் சலுகைகள் பெறுவதற்கு நிகழ்த்தப்படும் கூட்டங்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட வேண்டும்.

மேலும் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே எந்தவித சிரமமும் இன்றி வருவதற்கு போதுமான சக்கர நாற்காலிகளை வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை பெற்று தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டங்களை நடத்தும்போது அவர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக உள்ள பள்ளிகள் மற்றும் கீழ் தளத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை வட்ட வழங்க அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் பன்னீர்செல்வம், சுகுணா, சாப்ஜான், ரேணுகா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் விஜயகுமார் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Oct 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...