/* */

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (2023 - 2024-ம் கல்வி ஆண்டிற்கு) கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம், இளநிலை கல்விக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம், முதுநிலை மற்றும் தொழிற்கல்விக்கு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் என கல்வி உதவித்தொகையாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக http://www.tncsevai.tn.gov.in/citizen/registration:aspx என்ற இணையதளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (மருத்துவ சான்றுடன்), மாணவர் மற்றும் பாதுகாவலர் வங்கி இணை கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரோடு பெற்ற போனோபைடு சான்றுகளுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தொலைபேசி எண்ணில் 04175-233626 தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Aug 2023 1:18 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை