/* */

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்

'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு வேளாண்மை துறையின் மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும்

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jun 2023 1:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்