/* */

விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்

விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர் கடனுதவிகளை பெற கூட்டுறவு நிறுவனங்களை அணுகி பயன் பெறலாம்.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்
X

பைல் படம்

விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர் கடனுதவிகளை பெற கூட்டுறவு நிறுவனங்களை அணுகி பயன் பெறலாம்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 160 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்களும், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்களும் செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 37 கிளைகளுடனும், 4 நகர கூட்டுறவு வங்கிகளும், 8 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ, டாப்செட்கோ, டாம்கோ கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ, டாப்செட்கோ, டாம்கோ கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது என திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Aug 2023 1:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்