/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை வழங்கிய ஆட்சியா்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், உணவு வழங்கி அவர்களுடனே ஆட்சியர் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை வழங்கிய ஆட்சியா்
X

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.முகாமுக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று விசாரித்தாா். மாற்றுத்திறனாளிகள் அமா்ந்திருந்த இருக்கைகளுக்கே ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஒவ்வொருவரிடமும் சில நிமிடங்களை ஒதுங்கி கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்தாா்.

முகாமில், 8 பேருக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களும், ஒருவருக்கு ரூ.9 ஆயிரத்து 600 மதிப்பில் 3 சக்கரம் பொருத்தப்பட்ட சைக்கிளும் வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வேண்டி 437 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தகுதியான 285 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 37 பேருக்கு பேருந்துப் பயண அட்டைகளும், 25 பேருக்கு ரயில் பயணச் சலுகை அட்டையும், 6 பேருக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன.வங்கிக் கடன் தொடா்பான 42 மனுக்கள், பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 13 மனுக்களும், சக்கர நாற்காலி வேண்டி 9 மனுக்களும், மாதாந்திர உதவித்தொகை வேண்டி 27 மனுக்களும் பெறப்பட்டன.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை வழங்கிய ஆட்சியா், அவா்களுடனே அமா்ந்து மதிய உணவைச் சாப்பிட்டாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

ருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காணொலி அறையில், 2024 மக்களவைத் தேர்தல் தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

புதுதில்லியில் இருந்தபடியே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனா். இதில், மக்களவைத் தேர்தல் பணிகள் தொடா்பான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்கள்) குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Updated On: 9 Feb 2024 1:57 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...