/* */

திருவண்ணாமலையில் கட்டணமில்லா பேருந்து வசதி!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கட்டணம் இல்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கட்டணமில்லா பேருந்து வசதி!
X

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா புவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. அதை ஒட்டி, தமிழ்நாடு மற்றுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒட்டி, திருவண்ணாமலையில் ஷேர் ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பேருந்து வசதி

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணம் இல்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலம் பாதைக்கு வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் ஆகியவை இணைந்து கட்டணமில்லா பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளன. பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

தற்காலிக பேருந்து நிலையம் மார்க்கம்

காஞ்சி ரோடு டான் கோ பள்ளி- காஞ்சி , மேல்சோழங்குப்பம்

வேலூர் ரோடு நுழைவு வாயில், வேலூர், போளூர் ,ஆரணி, ஆற்காடு,செய்யாறு

அவலூர்பேட்டை ரோடு srgds பள்ளி எதிரில்- சேத்துப்பட்டு,வந்தவாசி, காஞ்சிபுரம்

திண்டிவனம் ரோடு ஆறுமுகனார் நகர்- கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம்

` திண்டிவனம் ரோடு அன்பாலயா நகர் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி

வேட்டவலம் ரோடு சர்வேயர் நகர்- வேட்டவலம், விழுப்புரம்

திருக்கோயிலூர் ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் - திருக்கோயிலூர் பண்ருட்டி,கடலூர்,சிதம்பரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி

மணலூர்பேட்டை ரோடு , செந்தமிழ் நகர் - கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை, மணலூர்பேட்டை

செங்கம் ரோடு அத்தியந்தல் - திருப்பத்தூர், சேலம் ,பெங்கர்,ஒசூர் ஈரோடு, கோயம்புத்தூர்

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதை அருகில் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

மேலும் பயணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 April 2024 2:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  2. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  3. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  4. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  5. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  7. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  9. கோவை மாநகர்
    போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
  10. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!