/* */

பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

நிவாரண நிதி குறைவாக வழங்குவதை கண்டித்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
X

பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் சம்பா சாகுபடி, மணிலா, பயிறு வகைகள், தோட்டப்பயிர் சேதமாகி உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய பார்வை குழு பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு ரூ.4,526 கோடிக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

மத்திய அரசு இடைக்கால நிதி வழங்காத நிலையில், மாநில அரசு ரூ.132 கோடி வெள்ள நிவாரண நிதி விடுவித்துள்ளது. இதன் மூலம் 2.65 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அறிவித்துள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிதியில் பாதிப்பு பரப்பளவு குறித்தும், பயனாளிகளுக்கு சராசரியாக ரூ.5 ஆயிரம் பங்கிட்டு வங்கி கணக்கில் செலுத்த உள்ளது.

இது யானைப்பசிக்கு சோளப்பொரி வழங்குவது போல் உள்ளது எனக்கூறி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாயிகள் சார்பில் பொதுமக்களுக்கு பொரி கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மத்திய அரசிடம் நிதி பெற்று கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் கிசான் நிதி மோசடி போல சாகுபடி செய்யாதவர்களுக்கு வங்கிக் கணக்கில் நிவாரண நிதி வழங்குகிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார். இதில் விவசாயிகள் சம்பத், சத்யராஜ், சின்னப் பையன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jan 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?