/* */

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற, திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

பொதுப்பணி துறை அமைச்சரும் , திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ வ.வேலு, தீர்மானங்களை விளக்கி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம், அதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார்; சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான வேலு, தீர்மானங்களை விளக்கி பேசினார். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, தலைசிறந்த முதல்வராக பாராட்டுப் பெறும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் என அனைத்து இடங்களிலும் 100% திமுகவினர் வெற்றி பெற அயராது பாடுபடுவது, தைப்பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் ஆக மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, அம்பேத் குமார், சரவணன் ,ஜோதி, நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...