/* */

வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்

Today Meeting News -வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்
X

வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ,காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

Today Meeting News - குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பணிக்குழு, கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் இ-ஸ்ரம் மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவற்றின் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசுகையில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 789 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் நடைபெற உள்ள இ-ஸ்ரம் முகாமில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்து பயன்பெறலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் தொழிலாளர்களை ஒழிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறியும் நேர்வில் ஏற்படும் சிரமங்கள் குறித்து குழு உறுப்பினர்களுடன் கலெக்டர் கலந்து ஆலோசித்தார்.

கூட்டத்தில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்கள், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 Sep 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு