/* */

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.15 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.3.15 கோடி செலுத்தியுள்ளனா்

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.15 கோடி
X

இணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் ரூ.3.15 கோடி ரொக்கம், 210 கிராம் தங்கம், 1 கிலோ 695 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம்.

மார்கழி மாதத்திற்கான பௌர்ணமி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி காலையில் தொடங்கி 26 ஆம் தேதி அதிகாலையில் நிறைவடைந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

அதன்படி, மார்கழி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 8.30 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் ஜோதி தலைமையில் அறங்காவலா்கள் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

அப்போது, கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.3 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 210 கிராம் தங்கம், 1 கிலோ 695 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த தீபத் திருவிழா நடைபெற்ற கார்த்திகை மாதம் அண்ணாமலையார் கோவிலுக்கு முதன்முறையாக ரூபாய் 3 கோடியே 62 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. மார்கழி மாதமும் உண்டியல் காணிக்கை 3 கோடிக்கு குறையாமல் வந்துள்ளது, கோவில் நிர்வாகத்தை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Updated On: 6 Jan 2024 12:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...