/* */

கேலோ இந்தியா விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

கேலோ இந்தியா விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு துணை சபாநாயகர் வழங்கினார்

HIGHLIGHTS

கேலோ இந்தியா விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு
X

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் பரிசுகளை வழங்கிய துணை சபாநாயகர்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 நகரங்களில் ஜனவரி 19 முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாட்டில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இப்போட்டியினை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் நான்கு பெரு நகரங்களில் இருந்து கேண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு பெரு நகரங்களில் இருந்து வரப்பெற்ற கேண்டர்களை அனைத்து மண்டலங்கள் வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்னையை நோக்கிய பயணமாக வந்த வண்ணம் உள்ளன. இந்த நிகழ்வினை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கேண்டர்கள் வந்தடைந்தது.

இந்த கேண்டர்களை மூலம் வரப்பெறும் ஜோதியினை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பேரணியாக கொண்டு செல்வதை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 6-ஆவது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டி தொடா்பான விழிப்புணா்வு வாகன இயக்க விழா, விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டி தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மேலும், கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டி தொடா்பான விழிப்புணா்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற 36 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை கு.பிச்சாண்டி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் பாலமுருகன், விளையாட்டு விடுதி மேலாளா் சண்முகப்பிரியா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 16 Jan 2024 1:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...