/* */

தீபத் திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆவது நாளான நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது

HIGHLIGHTS

தீபத் திருவிழா:   கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா
X

பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆவது நாளான நேற்று காலை நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா், நேற்று இரவு கற்பக விருட்ச வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

அதன்படி, தீபத் திருவிழாவின் 4-ஆவது நாளான நேற்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவா் விநாயகா், நாக வாகனத்தில் உற்சவா் சந்திரசேகரா் வீதியுலா வந்தனா்.

இரவு 10.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த உற்சவா் சுவாமிகளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இன்று கண்ணாடி ரிஷிப வாகனத்தில்... தீபத் திருவிழாவின் 5-வது நாளான செவ்வாய்க்கிழமை (நவ.21) காலை மூஷிக வாகனத்தில் விநாயகா், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெறும். இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் மற்றும் வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Updated On: 22 Nov 2023 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!