காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

Ribbon pagoda recipe- ருசியான ரிப்பன் பகோடா ( கோப்பு படம்)
Ribbon pagoda recipe- 30 நிமிடத்தில் காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா
ரசம் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற மதிய உணவுகளுக்கும் மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது கடித்து சாப்பிடுவதற்கும் ஏற்ற தின்பண்டம் என்றால் அது ரிப்பன் பக்கோடா. பேச்சுலர்கள் இதை ஒரு முறை தயாரித்தால் வாரம் முழுவதிற்கும் வைத்து சாப்பிடலாம். ரிப்பன் பக்கோடாவை இரண்டு விதமாக செய்யலாம்.
அரிசி மாவை அதிகம் போட்டு கடலை மாவு கம்மியாக கலந்து செய்தால் வெள்ளையும் - மஞ்சளும் கலந்த நிறத்தில் ரிப்பன் பக்கோடா வரும். கடலை மாவு அதிகம் போட்டு அரிசி மாவு குறைவாக கலந்து மிளகாய் தூள் சேர்த்து செய்தால் சிவப்பும் பழுப்பும் கலந்த நிறந்த்தில் பக்கோடா இருக்கும். தமிழகத்தில் காரசாரமாக இருக்கும் ரிப்பன் பக்கோடா ஃபேமஸ். அந்த வகையில் கடலை மாவு அதிகம் பயன்படுத்தி செய்யும் ரிப்பன் பக்கோடா பற்றி பார்க்கலாம்.
ரிப்பன் பக்கோடா செய்யத் தேவையானவை
கடலை மாவு
அரிசி மாவு
உப்பு
வெள்ளை எள்
தண்ணீர்
கடலெண்ணெய்
ஓமம்
பெருங்காயத் தூள்
மிளகாய் தூள்
வெண்ணெய்
ரிப்பன் பக்கோடா செய்முறை
ரிப்பன் செய்வதற்கு தரமான கடலை மாவு தேவை. முதலில் அரை கிலோ கடலை மாவுடன் 50 கிராம் சேருங்கள். அதாவது 1: 10 என்ற விகிதம்.
இதே நாம் அரிசி மாவு அதிகம் போட்டு செய்வதாக இருந்தால் ஒரு கிலோ அரிசி மாவுக்கு 100 கிராம் கடலை மாவு சேருங்கள்.
இப்போது தேவையான அளவு உப்பு, மூன்று ஸ்பூன் வெள்ளை எள், அரை ஸ்பூன் ஓமம், தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள், மிளகாய் தூள் சேருங்கள்.
கடாயில் 20 கிராம் வெண்ணெய் உருக்கி அதை மாவுடன் சேர்க்கவும். ரிப்பன் பக்கோட மொறு மொறுப்பாக வந்தாலும் மாவுக்கு மென்மையை வெண்ணெய் மென்மையை கொடுக்கும்.
அனைத்தையும் நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வர தண்ணீர் ஊற்றி பிசையவும்.
மாவின் மேல் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி தட்டிய பிறகு பத்து நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்.
அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். முறுக்கு சுடும் குழாயில் ரிப்பன் பக்கோடா அச்சு வைத்து அதில் மாவை போடுங்கள்.
எண்ணெய் சூடான பிறகு குறைந்த தீயில் ரிப்பன் பக்கோடாவை பொரித்து எடுக்கவும்.
மூன்று - நான்கு நிமிடங்களில் ரிப்பன் பக்கோடா வெந்து விடும்.
நாம் பயன்படுத்திய அரை கிலோ கடலை மாவு எண்ணெய்-ல் பொரித்த பிறகு முக்கால் கிலோ ரிப்பன் பக்கோடா ஆக வரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu