/* */

கிரிவலப் பாதை மற்றும் மாட வீதியில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 10ம் தேதிக்குள் நிறைவடையும் என கலெக்டர் உறுதியளித்துள்ளார்.

HIGHLIGHTS

கிரிவலப் பாதை மற்றும் மாட வீதியில் கலெக்டர் ஆய்வு
X

கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக பே கோபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள பூத நாராயணன் கோவில் வரை சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியானது இன்னும் சில நாட்களில் முடி உர உள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் அவர்கள் இப்பணி நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம், மின்சார துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளபட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.

இறுதி கட்டப் பணியை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு பொதுமக்கள், பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், மின்சார துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும். என அறிவுறுத்தினார்.

பின்னர் திருக்கோவிலை சுற்றியுள்ள தென் ஒத்த வாடை வீதி, வட ஒத்தவாடை வீதி, ராஜகோபுரம் அருகே உள்ளிட்ட இடங்களில் நடைபாதைகளை அடைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ள கடைக்காரர்களை எச்சரித்த கலெக்டர் முருகேஷ், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை , நகராட்சி , வருவாய்த்துறை காவல்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து மாட வீதியில் மற்றும் திருக்கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளையும் எச்சரித்தார்.

மேலும் தென் ஒத்த வாட வீதி, வட ஒத்த வாடை வீதி , வீதிகளில் சாலைகளை முறையாக நேராக அமைக்க வேண்டும் என்றும் வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல, கிரிவலப் பாதை முழுவதும் உள்ள சாலையோரக் கடைகள், ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை மூலம் அகற்ற வேண்டும். தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வா்களைக் கொண்டு கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபால கிருஷ்ணன், திருவண்ணாமலை நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கலைமணி, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யாதேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

Updated On: 2 Nov 2023 12:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  2. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  3. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  4. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  5. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  7. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  8. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...
  9. ஈரோடு
    ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம், கார் பந்தயமாக...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 27ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்