அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!

அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
X
உலகை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.அந்த மகத்தான பணிக்கு செய்யும் கௌரவமே ஆசிரியர் தினம். ஆசிரியர்களைப் போற்றுவோம்.

Teachers Day Wishes in Tamil Kavithai

ஆசிரியர் பணி அறப்பணி. கொடுக்க கொடுக்க குறையாத செல்வம் கல்விச் செல்வம். இது கொடுக்க கொடுக்க கூடும் செல்வம். ஆம், ஆசிரியர் கற்றுக்கொடுக்க கொடுக்க அவரது அறிவும் மேம்படுகிறது. ஆசிரியரை கற்றுக்கொடுப்பாவர் என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா..? முதலில் தான் கற்று பின்னர் அதைக் கற்றுக்கொடுக்கிறார். அதனால்தான் ஆசிரியரை கற்றுக்கொடுப்பவர் என்கிறோம்.

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். நாம் செய்வதற்கு எத்தனையோ பணிகள் இருந்தாலும் ஆசிரியர் பணி முதன்மையானதாகும். எத்தகைய உயர் பதவிகள் இருந்தாலும் கூட அத்தகைய பணிக்கு வருவதற்கு ஆசிரியர் என்பவர் கற்றுக்கொடுக்கவேண்டும்.

Teachers Day Wishes in Tamil Kavithai

ஆகவே ஆசிரியர் பணி முதன்மையானது. தன்னைவிட தனது மாணவன் அறிவிற் சிறந்து விளங்கினால் அதைக்கண்டு பேருவகை கொள்வதையு ஆசிரியர் மட்டுமே. அத்தகைய பெருமைகொண்ட ஆசிரிய தின வரலாறு, அதை நாம் ஏன் கொண்டாடவேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

ஆசிரியர் தின வரலாறு

இந்தியாவில் செப்டம்பர் 5-ம் தேதி அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணமானவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் தான். அவரது பிறந்தநாள்தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Teachers Day Wishes in Tamil Kavithai

நமது சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தவரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962ம் ஆண்டுமுதல் நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் சில அக்டோபர் 5 ஆம் தேதியும் மற்ற நாடுகள் வேறு வேறு தேதிகளிலும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மாதா, பிதா, குரு என்ற வரிசையில் மூன்றாவதாக உள்ள குரு என்பவர்கள் ஆசிரியர்கள் ஆவார்கள். ஆசிரியர் என்றால் ஆசு+ இரியர் அதாவது ஆசு என்பது மாசு என்பது பொருளாகும். இரி என்றால் நீக்குதல் என்பதாகும். ஆகவே மாசுகளை நீக்கி பரிசுத்தமாக உருவாக்குதல் என்பது இதன் உட்பொருள்.

ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள மாசுகளை நீக்கி அவர்களை முழுமையான மனிதனாக உருவாக்குகிறர்கள். அவர்தான் ஆசிரியர். ஆசிரியர்கள், முதலில் ஒழுக்கத்தை கற்றுத்தருகிறார். ஒழுக்கம் என்பதில் பணிவு, பெரியோரை மதித்தல் போன்ற அடிப்படை பண்புகள் வளரும். கற்பித்தலில் முதல் படி ஒழுக்கம்.

Teachers Day Wishes in Tamil Kavithai


அதன் பின்னர்தான் மற்றவை. பாடங்களை கற்பித்தலுடன் அன்பு, கருணை, இரக்கம். தன்னம்பிக்கை, ஆளுமை போன்ற பல்வேறு குணகளையும் ஊட்டுவது ஆசிரியர்களின் சிறப்பு. அதுவே மாணவர்களின் எதிர்கால வழிகாட்டியாக விளங்குகிறது.

கல்வி ஒன்றுதான் எதிர்கால வழிகாட்டி. ஒரு நாட்டை செதுக்குவது எதிர்tகால சந்ததி. அந்த சந்ததிக்கு அறிவு ஞானத்தை அள்ளித்தருவது கல்வி. ஆகவே ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அந்த நாட்டின் கல்வி முதன்மை பெறுகிறது.

அத்தகைய கல்வியை ஊட்டிய ஆசிரியர்களின் பணியை, அவர்கள் செய்த தியாகத்தை கௌரவிக்கும் வகையில்,1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது.

Teachers Day Wishes in Tamil Kavithai

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவிலும் அக்டோபர் மாதத்தில் சில நாடுகளிலும் என வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீனாவில் செப்டம்பர் 10, மலேசியாவில் மே 16, ஸ்பெயினில் நவம்பர் 27ம் தேதி மற்றும் ஈராக்கில் மார்ச் 1ம் தேதி என வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Teachers Day Wishes in Tamil Kavithai

ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி கொண்டாட கரணம் என்ன..?

அக்டோபர் 5ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்தது, 1966ம் ஆண்டு ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையே நடந்த மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டது. அன்றில் இருந்து உலக ஆசிரியர்கள் தினம் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தினத்தன்று, குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் பேச்சுப்போட்டிகள், ஆசிரியர்களை போற்றும் பாடல்கள் மற்றும் நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Teachers Day Wishes in Tamil Kavithai


அதேபோல அன்றைய தினம் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை கௌரவித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விருதுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகளால் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களே ஒரு நாட்டின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகள். அவர்களை போற்றுதல் ஆண்டவனை போற்றுதலுக்குச் சமம்.

Teachers Day Wishes in Tamil Kavithai

ஆசிரியர் தின வாழ்த்து கவிதை வடிவில் :

ஞான விதையை நெஞ்சில் விதைத்து

நல் ஒழுக்கம் என்ற நீரை ஊற்றி

வளர்ந்து ஓங்கும் வையக மரமாய்

மாணவர்களை மாற்றும் வித்தகரே வாழ்க..!

ஏட்டின் எழுத்தை வாழ்க்கை ஆக்கி

எண்ணும் திறனை எழுச்சி கொள்ளச் செய்து

காலத்தின் கனவை நனவாக்கும் பணிசெய்யும்

காவலரே! ஆசிரியரே! ஞானகுருவே வணக்கம்!


தாய் போல் தாலாட்டி தந்தையென

தன்னம்பிக்கை ஊட்டி நல் வழியில்

செலுத்தும் தெய்வம் நீ ஆசிரியரே!

உங்கள் சேவை போற்றுதும் என்றும்!

கல்வி என்னும் கனல் விளக்கை ஏந்தி

காரிருள் அகற்றி வெளிச்சம் காட்டும்

திசைகாட்டும் ஒளி விளக்கே எம்குருவே!

அசைபோட்டுப் பார்க்கிறேன் உங்கள் தியாகத்தையே!

வகுப்பறை என்னும் கோயிலில் நிதம்

அறிவு என்னும் அமுதம் பகிர்ந்து

மாணவ உள்ளம் மலரச் செய்த

மாணிக்கமே! மகானே! ஆசிரியரே! வணக்கம்!

Teachers Day Wishes in Tamil Kavithai

உலகை உருவாக்கும் உன்னத பணி

உங்களைச் சார்ந்தே உள்ளது என்பதால்

நாட்டின் எதிர்கால நிர்ணயம் நீங்களே.!

ஏட்டின் வாயிலாக எடுத்துரைக்கும் எம்மாசானே!


எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக் கனவை

இளம் தலைமுறையின் நெஞ்சில் விதைத்து

ஏற்றம் தரும் வித்தகரே ஆசிரியரே!

என்றும் போற்றுதும் உம் பணியை!

கற்றலின் இனிமையை கற்பித்தவரே!

கனவுகளுக்கு சிறகு தந்து பறக்கச்செய்தவரே!

நம்பிக்கை ஊட்டி வாழ்க்கைக்கு வழிகாட்டிய

நல் ஆசானே! உங்கள் பணி போற்றுதும்!

உங்கள் திறமைக்கு ஈடு இணை ஏது?

உங்கள் அர்ப்பணிப்புக்கு ஈடு இணை ஏது?

எங்கள் வாழ்வை ஒளிரச் செய்த

உன்னத ஆசிரியரே! நன்றியுடன் வணங்குகிறோம்!

கல்வியின் சுடரை ஏந்தி நடத்தும்

கருணை உள்ளம் கொண்ட காவலரே!

உங்கள் பாதம் தொட்டு வணங்கி

நன்றியோடு உங்களை போற்றுவோம் என்றென்றும்!

Tags

Next Story
Weight Loss Tips In Tamil