உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!

உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
X

உசிலம்பட்டி அருகே, பத்திரகாளி அம்மன் கோவில் ஆலய திருவிழா.

உசிலம்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு , ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ளது நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலின் வைகாசி பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த வைகாசி பொங்கல் திருவிழா நேற்று முதல் துவங்கி 5 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று ஏராளமான பக்தர்கள் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல் நிலைப்பள்ளியில், இருந்து அக்னி சட்டி எடுத்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான கவணம்பட்டி ரோடு, பேரையூர் ரோடு, மதுரை ரோடு, தேனி ரோடு வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து, பத்ர காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business