/* */

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம்: முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலத்தை நாளை காலை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கிறார்,பொதுமக்கள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம்: முதல்வர்  நாளை திறந்து வைக்கிறார்
X

முதல்வர் திறந்து வைக்கவுள்ள ரயில்வே மேம்பாலம் 

திருவண்ணாமலை அண்ணாசாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி துவங்கியது. தற்போது மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதமாகியும் பாலம் திறக்கப்படாமல் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அண்ணாசாலையில் மேம்பால பணிகள் நடப்பதால் திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் திருவண்ணாமலைக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவலூர்பேட்டை சாலை வழியாகவும் வேட்டவலம் பைபாஸ் சாலை வழியாகவும் சென்று வந்தன . இதனால் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

முதல்வர் நேரில் வந்து மேம்பாலத்தை திறந்து வைப்பார் எனவும் அதனால் பணிகள் முடிந்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகவும் பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், ஆன்மீக பக்தர்கள் பாஜக அதிமுக என அனைவரும் மேம்பாலத்தை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் அடுத்த வாரம் சித்ரா பவுர்ணமி வரை இருப்பதால் கிரிவலத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக உடனடியாக மேம்பாலத்தை திறக்க வேண்டும் என ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசிடமிருந்து நாளை காலை 9.30 மணி அளவில் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைப்பார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் திருவண்ணாமலை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர். மேம்பாலம் தற்போது மின் விளக்குகளால் ஜொலிக்க பட்டு அலங்கரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.

Updated On: 6 April 2022 2:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?