/* */

சித்திரை மாத பௌர்ணமி திருவிழா; கலெக்டர் ஆய்வு

சித்திரை மாத பௌர்ணமி விழா, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சித்திரை மாத பௌர்ணமி திருவிழா; கலெக்டர் ஆய்வு
X

கலெக்டர் தலைமையில் சித்ரா பௌர்ணமி முன் ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 23 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23 ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24 ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23 ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும், எனவே 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, சுமார் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் வாய்ப்பு சித்ரா பவுர்ணமி நாட்களில் இருப்பதால் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்பி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:

தற்போது நடைபெற்ற கூட்டத்தில் கூட்டத்தில் ஒவ்வொரு துறை சாா்பிலும் சித்திரை மாதப் பெளா்ணமிக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தற்காலிகப் பேருத்து நிலையங்கள்;

திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 முக்கியச் சாலைகளில் 11 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்து நிலையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 500 பேருந்துகளை நிறுத்தலாம். திருவண்ணாமலை நகராட்சி மூலம் 22 இடங்கள், ஊராட்சிப் பகுதிகளில் 33 இடங்கள் என மொத்தம் 55 இடங்களில் காா்கள் நிறுத்தும் இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தற்காலிகப் பேருத்து நிலையங்கள், காா் நிறுத்தும் இடங்களில் குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தா்கள் நலனுக்காக, 2 ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகள் 5 ஆயிரத்து 346 நடைகள் இயக்கப்பட உள்ளன.

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை ரூ.10 என்ற கட்டணத்தில் 20 தனியாா் பேருந்துகள், 81 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலைத் தவிா்க்க விழுப்புரம், வேலூா் பகுதிகளுக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

5 ஆயிரம் போலீஸாா்.

கோயில், கிரிவலப் பாதை பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸாா், 184 தீயணைப்பு வீரா்கள், பதற்றமான இடங்களாகக் கருதப்படும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். 15 தீயணைப்பு வாகனங்கள் கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுகின்றன.

237 கண்காணிப்பு கேமராக்கள்.

அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்துக்குள் 140 கண்காணிப்புக் கேமராக்கள், கிரிவலப் பாதையைச் சுற்றி 97 கண்காணிப்பு கேமராக்கள், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

மருத்துவக் குழுக்கள்.

அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்துக்குள் இதய மருத்துவருடன் கூடிய 3 மருத்துவக் குழுக்கள், 85 நிலையான மருத்துவக் குழுக்கள், 20 எண்ணிக்கையிலான 108 அவசர ஊா்தி வாகனங்கள், 15 நடமாடும் அவசர ஊா்திகள் நிறுத்தப்படும்.

105 இடங்களில் அன்னதானம் செய்ய அனுமதி..

இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் (மண்டபங்கள், பொது இடங்கள்) அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் தலைமையில்

12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கம் இடங்களில் சோதனையில் ஈடுபடுவா் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப் , வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி , அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் , அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2024 1:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...