/* */

திருவண்ணாமலை மாவட்ட குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

குறைதீர்வு நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
X

பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தனலட்சுமி.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 628 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) முருகன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் நேரு நகர் திருமூர்த்தி தெருவை சேர்ந்த மணி என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 73) ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தனலட்சுமியின் கணவர் மணி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். அவரது 2-வது மகன் பென்சன் புத்தகத்தை ஒளித்து வைத்து, மணியை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அதை கேட்டதால் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் அவருக்கு ஆறுதல் கூறி உடன் வந்த அவரது மகள் சிவகாமியிடம் மனுவை கொடுத்து குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு சம்பவம்:

ஆரணி தாலுகா குளத்துமேடு சேவூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர்கள் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அவர்களிடம் விசாரித்த போலீசார் கூறுகையில் எங்களுக்கு சொந்தமாக தேவிகாபுரத்தில் வீடு மற்றும் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் உறவினர்கள் சிலர் எங்களை மிரட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று பத்திரத்தில் கையெழுத்து போட வைத்து வீட்டையும், நிலத்தையும் அபகரித்து கொண்டனர். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தையும், வீட்டையும் மீட்டுத்தர வேண்டும் என்றனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன். இவர், தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்வு கூட்டத்தில் அளித்தார்.

அந்த மனுவில், தனக்கு சொந்தமான வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். குடும்ப கடன் சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.8 லட்சம் கடனாக பெற்றேன்.

இதற்காக தனக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை கொடுத்ததை அந்த நபர் கடன் பத்திரமாக பதியாமல் சாதுர்யமாக செயல்பட்டு கிரைய ஒப்பந்த பத்திரமாக போட்டு உள்ளார்.

படிப்பறிவு இல்லாததால் இதுகுறித்து தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகையை கொடுத்துவிட்டு, கடன் பத்திரத்தின் நகலை கேட்கும் பொழுது எங்களை அலைக்கழித்து வந்தார்.

தற்போது வீட்டை காலி செய்துவிட்டு போய்விடு என்று மிரட்டல் விடுக்கிறார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கதறி அழுத பெண்:

செங்கம் தாலுகா அந்தனூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது மனைவி விஜயாவுடன் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கூட்டரங்கில் இருந்து வெளியே வந்த விஜயா ஆட்சியர் அலுவலக படிக்கட்டில் அமர்ந்து கதறி அழுதார். பின்னர் அவரை போலீசார் சமாதானம் செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், தங்களுக்கு சொந்தமாக அந்தனூர் கிராமத்தில் 3 ஏக்கர் 20 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு சென்று வந்த பொது வழி புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இதை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து எங்களுக்கு வழி விடாமல் உள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்யவில்லை. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Updated On: 17 May 2022 1:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...