/* */

விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் ஏற்பாடு

உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் ஏற்பாடு
X

பைல் படம்

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பகுதியில் அஞ்சல் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Sep 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...