/* */

திருவண்ணாமலைக்கு போறீங்களா? ஆட்டோ கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஷேர் ஆட்டோவில் தனிநபர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு போறீங்களா? ஆட்டோ கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
X

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா புவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. அதை ஒட்டி, தமிழ்நாடு மற்றுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒட்டி, திருவண்ணாமலையில் ஷேர் ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ ரிக்ஷா செல்லும் வழித்தடம், தனிநபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.30 மட்டும்

அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்)

அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)

திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை (பெரும்பாக்கம்)

வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை

திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)

மணலுார் பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)

அரசு கலை கல்லுாரி முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)

திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை (திருக்கோவிலூர் ரோடு)

திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை (அமோகா ஓட்டல்)

நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு)

பச்சையம்மன் கோவில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை (சங்கு ஊதும் இடம்)

தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை

எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை

அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை

தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு பக்தர்கள் பயணிக்க ஆட்டோ ரிக்ஷா தனி நபர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 950 உள்ளுர் ஆட்டோகளுக்கு ஆவணங்கள் சரிபாக்கப்பட்டு எந்தெந்த வழித்தடத்திற்கு எவ்வளவு தனி நபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படுள்ளது.

மேலும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்டோக்கள் கட்டணம் பற்றி விவரங்கள் டிஜிட்டல் பேனர்கள் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் எளிதாக பொதுமக்கள் பார்வையில் தென்படும் வகையில் அமைக்கப்படும். ஆட்டோ கட்டணம் குறித்து ஆட்டோக்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுள்ளது.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 04175 232266 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் ஸ்டிக்கரில் பொறிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

வருவாய் துறை போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் இணைந்து சித்ரா பௌர்ணமி - 2024 அன்று பொதுமக்கள் இடையூறின்றி கிரிவலப் பாதையில் சென்று வர இவ்வலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்புப்பணியில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் பணியமர்த்தப்படும்.

என மாவட்ட ஆட்சித்தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 April 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  7. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  9. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  10. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்