/* */

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

HIGHLIGHTS

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்:  பக்தர்கள் சுவாமி தரிசனம்
X

இன்று அதிகாலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பௌர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.

அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது

நேற்று அதிகாலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி கோ பூஜை நடைபெற்றது பின்னர் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் செல்ல தொடங்கினர்.

விடுமுறை மற்றும் அன்னாபிஷேகம் என்பதால் மாலைக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா புதுவை போன்ற வெளி மாநில பக்தர்களின் வருகை மிக அதிக அளவு இருந்தது கோயிலில் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரா் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரா் கோயில் மூலவருக்கும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா் . சிவனுக்கு படைக்கப்பட்டிருந்த அன்னம், பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பின்னர் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நள்ளிரவு 2 மணிக்கு பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Updated On: 29 Oct 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?