/* */

வரட்தட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வரட்தட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் வட்டம், எலந்தம்புரவடை கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சோந்தவா் காசிநாதன் (63). இவரது மனைவி பட்டு (58). இவா்களின் மகன் பச்சையப்பனுக்கும் (34), ராதா என்பவருக்கும் 2007 ஏப்ரல் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

திருமணத்துக்குப் பிறகு ராதாவிடம் பச்சையப்பன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். இதுகுறித்து 2 முறை திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, தம்பதியை போலீசார் சமாதானம் செய்து வைத்தனா்.

இந்த நிலையில், 2014 பிப்ரவரி மாதம் மீண்டும் வரதட்சணைக் கேட்டு பச்சையப்பன் ராதாவிடம் தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த ராதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து ராதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பன், காசிநாதன், பட்டு ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வீணாதேவி ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட ராதாவின் கணவா் பச்சையப்பன், மாமனாா் காசிநாதன், மாமியாா் பட்டு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On: 14 Sep 2022 10:09 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு