/* */

ஐஸ்கட்டி மீது அமர்ந்து 11 வயது சிறுமி மஞ்சப்பை விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பையை உபயோகிக்க வலியுறுத்தி ஐஸ்கட்டி மீது அமர்ந்து யோகா செய்து 11 வயது சிறுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

ஐஸ்கட்டி மீது அமர்ந்து 11 வயது சிறுமி மஞ்சப்பை விழிப்புணர்வு
X

பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பையை உபயோகிக்க வலியுறுத்தி ஐஸ்கட்டி மீது அமர்ந்து யோகா செய்து 11 வயது சிறுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருவருட்பா ஆசிரமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பையை உபயோகிக்க வலியுறுத்தி 11 வயது சிறுமி ஐஸ் கட்டியின் மீது நின்று யோகாசனங்கள் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் திருவண்ணாமலை அருகில் பண்டிதப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்- நிர்மலா தம்பதியரின் 11 வயது மகள் வர்ஷா என்பவர் ஐஸ் கட்டிகள் மீது அமர்ந்தும், நின்றவாறும் 51 விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

அப்போது ஏகபாத சிரசாசனம், பத்மாசனம், யோக நித்திரை ஆசனம், விருச்சிகாசனம், சிரசானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை 3 நிமிடங்கள் 51 வினாடிகளில் நிகழ்த்தி சாதனை செய்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நீதிபதி கிருபாநிதி, நடிகர் தாடி பாலாஜி, மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் பங்கேற்று சிறுமியை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். முடிவில் யோகா பயிற்சியாளர் கல்பனா நன்றி கூறினார்.

Updated On: 26 Dec 2021 3:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்