/* */

கலசபாக்கம் அருகே காளை விடும் திருவிழாவில் கோஷ்டி மோதல்

கலசபாக்கம் அருகே நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் கோஷ்டி மோதல்

HIGHLIGHTS

கலசபாக்கம் அருகே  காளை விடும்  திருவிழாவில் கோஷ்டி மோதல்
X

கோஷ்டி மோதல்

கலசபாக்கம் அருகே நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம், பட்டியந்தல், வீரளூர், கடலாடி, கீழ் பாலூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக காளை விடும் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு காளை விடும் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றன.

இது சம்பந்தமாக கடலாடி போலீசார் கட்டுப்பாடுகளை மீறி காளை விடும் திருவிழா நடத்திய விழா குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மாட்டு பொங்கலை முன்னிட்டு ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே இருதரப்பினரை சேர்ந்த இளைஞர்களிடையே கோஷ்டி மோதல் உருவானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். பின்பு அருகிலிருந்த ஓட்டு வீடுகளும் சூறையாடப்பட்டன. இதையடுத்து அங்கிருந்த போலீசார் விழாவை பாதியில் நிறுத்திவிட்டு கூட்டத்தை கலைத்தனர். பின்பு அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு, இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 16 Jan 2022 1:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  5. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  7. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  8. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  9. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  10. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...