/* */

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

HIGHLIGHTS

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு
X

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய வைரஸ்களான கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகியவை பரவுவது கட்டுக்குள் வந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி, இந்து வியாபாரி சங்கம் சார்பில் நெல்லையப்பர் கோவிலில் பிராத்தனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கொடிய வைரஸ் கிருமிகள் மக்களை அண்டாதவாறு காத்தருள வேண்டியும் பிரார்த்தனை செய்து இந்து வியாபாரி சங்கம் சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்காக சிறப்பு அலங்காரத்தில் தங்க தேரில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பதிகம் பாடல் பாடி தங்க தேர் இழுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் காசி பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மகாராஜன், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் குற்றாலநாதன், பாரதிய ஜனதா கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2021 4:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்