/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி
X

திருநெல்வேலி மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்றிரவு எடுத்துச் செல்லப்பட்டன.

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பிறகு பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. மேலும் வாக்காளர்களின் விவரங்கள் குறிக்கப்பட்ட படிவங்களும் மூடி கவரிடப்பட்டன. சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 3319 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2506 கட்டுப்பாடு எந்திரங்கள் 2653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வைத்து எண்ணப்பட உள்ளன. எனவே அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 7 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!